Monday, June 30, 2014

அவல் தேங்காய்பால்

ஊறவைத்த சிகப்பரிசி அவல்,
தேங்காய்பால்,
பேரீட்சை(இனிப்புகாக)

Wednesday, June 25, 2014

நிலக்கடலைப் பால்


தேவையானவை: 
நிலக்கடலை – 100 கிராம், 
வெல்லம் – 50 கிராம், 
தேங்காய்பால் – ஒரு கப், 
ஏலக்காய், சுக்கு – சிறிதளவு, 
வாழைப்பழம் – 1.

செய்முறை: நிலக்கடலையை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும். 

ஊறிய கடலையின் தோல் நீக்கி, தேங்காய் பால், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், சுக்கு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி அருந்தலாம்.
 

பலன்கள்: நிலக்கடலையில் உள்ள புரதமும் வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்தும் உடலுக்கு வலுவை கூட்டும். வாழைப்பழம் சேர்ப்பதால், வயிற்றுப் பிரச்னையைச் சரிசெய்யும். சர்க்கரை நோயாளிகள் இந்தப் பானத்தைத் தவிர்ப்பது நல்லது.

வெற்றிலை பானகம்


















தேவையானவை: 

வெற்றிலை – 7, 
காய்ச்சிய பால் – 2 கப், 
சப்ஜா விதை – அரை டீஸ்பூன், 
ரோஸ் சிரப் – சிறிதளவு, 
குல்கந்து – 4 டீஸ்பூன், 
நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் – 3 டீஸ்பூன் 
(பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த அத்திபழம்)

செய்முறை: வெற்றிலையைக் கழுவி, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைக்கவும். இதில், பால், குல்கந்த் சேர்த்துக் கலக்கவும். தண்ணீரில் ஊறவைத்த சப்ஜா விதையைச் சேர்த்து, ரோஸ் சிரப்பை ஊற்றி, நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸை சேர்த்து, குளிரவைத்துப் பரிமாறவும்.


பலன்கள்: வெற்றிலை வாய் துர்நாற்றத்தைப் போக்கும், பல் ஈறுகளில் உள்ள 
நீர் வறட்சியைத் தடுக்கும். சப்ஜா விதையில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் காக்கும்.

Wednesday, June 11, 2014

கேழ்வரகு களி (வரகு, சாமை, குதிரைவாலி )

3/4 கப் அரிசியை (வரகு, சாமை, குதிரைவாலி )

5 கப் தண்ணீரில் அடி கனமான பாத்திரத்தில்


 உப்பு போட்டு வேகவிட்டு பிறகு
அதில் 2 கப் கேழ்வரகு மாவை போட்டு 10 நிமிடம் 
சிறு தீயில் மூடி வைத்து வேகவிடுங்கள்.

பக்கத்தில் இன்னும் 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அவசியமானால் இந்த கேழ்வரகு கலவையில் சேர்த்து இன்னும் 20 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து இறக்கிவிடலாம்..
 
சாப்பிடும் போது கை நனைத்து உருட்டி வைத்து வேர்கடலை சட்னியோடு பரிமாறலாம்.


தினமும் காலை உணவு கூழ் தான்..வரகு, சாமை, குதிரைவாலியுடன்...வித்தியாசம் தெரியவில்லை..அருமையா இருக்கு

நன்றி
https://www.facebook.com/groups/139649789477115/

Tuesday, June 3, 2014

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?


தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..

ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
 

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்த பட்டது.