Wednesday, September 7, 2016

நெல்லி வெற்றிலை ரசம்

நெல்லி வெற்றிலை ரசம்

*குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது.*

தேவையான பொருட்கள்:
முழு நெல்லிக்காய் 10,
வெற்றிலை 20,
கொத்தமல்லி இலை,
கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் 4,
பூண்டு 6 பல்,
வால் மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் 2 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கேற்ப.

செய்முறை:
நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெறும் சட்டியில் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும். பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும். அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது. எலும்பு புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையுடன்..

Monday, August 29, 2016

பாரம்பரிய நெல்

விழித்துக்கொள்ளுங்கள் தமிழா...
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔👎
மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு நெல் ரகம்...
இந்த அரிசியை சாப்பிட்டால் சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
தமிழகத்தில் வழக்கொழிந்து போன ஆயிரம்,
ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.
‘‘ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
வெள்ளையான்,
குருவிகார்,
கல்லுருண்டை,
சிவப்பு கவுணி,
கருடன் சம்பா,
வரப்புக் குடைஞ்சான்,
குழியடிச்சம்பா,
பனங்காட்டுக் குடவாழை,
நவரா,
காட்டுயானம்,
சிறுமணி,
கரிமுண்டு,
ஒட்டடையான்,
சூரக்குறுவை...
இதெல்லாம் நம்ம தமிழ் பாரம்பரிய நெல் ரகங்கள்.
இந்த மாதிரி ஆயிரக்கணக்கான ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் கொண்டு போயிட்டாங்க.
இன்னைக்கு உள்ள விவசாயிகளுக்கு இதோட அருமையெல்லாம் தெரியாது. ஒவ்வொரு நெல்லும் ஒவ்வொரு மருந்து.
மாப்பிள்ளைச் சம்பான்னு ஒரு ரகம்... சாப்பிட்டா சக்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை!
கவுணி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும்.
கருங்குறுவை, யானைக்காலை குணமாக்கும்.
பால்குடவாழையில சமைச்சுச் சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும்.
தங்கச்சம்பாவை தங்க பஸ்பம்னே சொல்வாங்க.
( தங்கமே தங்கம் பாடலில் வருவதுதான்)
புயல், மழை, வெள்ளம், வறட்சி எல்லாத்தையும் தாங்கி வளர்ற ரகங்கள் ஏராளம் இருக்கு.
விதைச்சு விட்டுட்டா அறுவடைக்குப் போனா போதும்.
கடற்கரையோர உப்புநிலத்துக்கு ஒசுவக்குத்தாலை,
சிவப்புக்குடவாழை,
பனங்காட்டுக் குடவாழை.
மானாவாரி நிலங்கள்ல குறுவைக் களஞ்சியத்தையும், குருவிக்காரையையும் போட்டா காடு நிறையும்.
காட்டுப்பொன்னியை தென்னை, வாழைக்கு ஊடுபயிரா போடலாம்.
வறட்சியான நிலங்களுக்கு காட்டுயானம்,
தண்ணி நிக்கிற பகுதிகளுக்கு சூரக்குறுவை,
இலுப்பைப்பூ சம்பா...
இப்படி நுணுக்கம் பார்த்துப் போடணும்.
வரப்புக்குடைஞ்சான்னு ஒரு ரகம்... ஒரு செலவும் இல்லை. விளைஞ்சு நின்னா வரப்பு மறைஞ்சு போகும்.
இதையெல்லாம் இன்னைக்கு இழந்துட்டு நிக்கிறோம்.
விவசாயம் நசிஞ்சதுக்கு காவிரிப்பிரச்னை மட்டும்தான் காரணம்னு சொல்றாங்க.
அது உண்மையில்லை. விவசாயிகளோட மனோபாவமும் காரணம்.
எந்த மண்ணுக்கு எந்த நெல்லைப் போடணும், எப்போ போடணும்னு கணக்குகள் இருக்கு.
அதை எல்லாரும் மறந்துட்டாங்க..
புது தொழில்நுட்பம்னு சொல்லி நிலத்தை நாசமாக்கிட்டாங்க.
நம்ம இயற்கை தமிழ் விவசாயத்தை அழிச்சு, உரத்தையும் பூச்சிமருந்தையும் நம்ம மண்ணுல கொட்டுன நாடுகள், இப்போ இயற்கை விவசாயம் பண்றாங்க.
உலகத்துக்கே கத்துக்கொடுத்த தமிழர்கள் இன்று தொழில்நுட்பத்தைக் கடன் வாங்குறோம்.
திருத்துறைப்பூண்டியை அடுத்துள்ள கட்டிமேட்டில், பழமையான ஆதிரெங்கன் கோயிலை ஒட்டியிருக்கிறது செயராமனின் குடில். குடிலைச் சுற்றிலும் பச்சைப் பசேலென உடல் விரித்துக் கிடக்கிறது வயற்காடு. தழைத்து நிற்கிற அத்தனையும் தமிழ் பாரம்பரிய ரகங்கள்.
இவர் ஒரு நாடோடியைப் போல அலைந்து திரிகிறார் தமிழர் செயராமன்.
வயற்காடுகளையும், விவசாயிகளையும் தேடி அவரது பயணம் நீண்டுகொண்டே இருக்கிறது.
தமிழகத்தில் வழக்கொழிந்து போன 10 ஆயிரம் தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டு, தமிழக விவசாயத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதுதான் அவரது இலக்கு.
படித்தது பத்தாம் வகுப்புதான். ஆனால் ஒரு பேராசிரியரின் தெளிவோடு விவசாயமும், விஞ்ஞானமும் பேசுகிறார்.
தமிழ் பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி அளிப்பதோடு, விவசாயிகளுக்கு தமிழ் பாரம்பரிய விதைகளை இலவசமாகவும் வழங்குகிறார்.
வழக்கொழிந்து போன 63 நெல் ரகங்களை மீட்டு, வயற்காட்டுக்கு கொண்டு வந்த இவர், ‘ தமிழ் விதை வங்கி’ ஒன்றையும் நடத்துகிறார்.
அரசாங்கம் ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய ஏக்கருக்கு 30 கிலோ விதையைப் பரிந்துரைக்கிறது.
ஆனால் தமிழர் செயராமன் வெறும் 240 கிராம் போதும் என்கிறார்.
‘‘ஒவ்வொரு வருஷமும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறுகள்ல எங்க குடிலுக்குப் பக்கத்தில நெல் திருவிழா நடக்கும்.
நெல் உற்பத்தி முதல் விற்பனை வரை உள்ள பிரச்னைகள் பத்தி விவாதிப்போம்.
தமிழ் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி பண்ற பயிற்சிகளும் தருவோம். நிகழ்ச்சியோட இறுதியில, ஒரு விவசாயிக்கு ரெண்டு கிலோ வீதம் தமிழ் பாரம்பரிய விதைகளைக் கொடுப்போம்.
ஒரே ஒரு கண்டிஷன். 2 கிலோ விதையை வாங்கிட்டுப் போறவங்க, அதை சாகுபடி பண்ணி அடுத்த வருஷம் நாலு கிலோவா தரணும்.
இந்த வருஷம் நடந்த நெல் திருவிழாவுல 1860 விவசாயிகளுக்கு விதை கொடுத்திருக்கோம்’’ என வியக்க வைக்கிறார் தமிழர் செயராமன்.
இதைத்தான் பழங்கால தமிழர்கள் சோழர் காலத்திலயும் செஞ்சிருக்காங்க.
இவர்களை போன்றவர்களை அரசு ஊக்குவிக்காது, பாராட்டாது.
நீங்களாவது பகிருங்கள். அனைவரும் அறிய உதவுங்கள்.
*திருத்தமிழர் இயக்கம்*

Thursday, April 14, 2016

மண் பாணை குடிநீர்

"நீரின்றி அமையாது உலகு"
பத்து ஆண்டுகள் முன்பு நிலத்தடி நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தோம் .நம் உடலுக்கு தேவையான தாதுப் பொருள்கள் கிடைத்தது , உலகமையமாக்கள் கொள்கையால் குடிநீர் இன்று ஆண்டிற்கு 6000 கோடி ருபாய் ஈட்டும் வணிக பொருளாக இன்று மாறியுள்ளது. இந்திய முழுவதுமாக பாட்டில் குடிநீர் ,கேன் வாட்டர் என அன்னிய கார்ப்ரேட் நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பு குடிநீர் என்று விளம்பரம் படுத்தப்படுறது .இவ்வாறு பயன்படுத்தபடும் குடிநீரில் நாம் உடலுக்கு தேவையான தாது பொருள்கள் நிறைந்தவையா என ஆராய்ந்தால் இல்லையொன்ற பதில் மட்டுமே வருகிறது .RO மற்றும் IV தொழில்நுட்பம் மூலம் தாதுப் பொருள்களை பிரித்து வெறும் சக்கை குடிநீராக கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது .இந்த குடிநீரை உயிரோட்டமுள்ள நீராக மாற்றவும் மாறி வரும் கால நிலைக்கேற்ப்ப இந்த கோடையில் தொற்று நோய்களை தடுக்க. இதை முயற்சி சொய்யலாம்.
மிளகு 25 கிராம்
சீரகம் 25 கிராம்
தேத்தாங்கொட்டை 1
வெட்டி வேர் சிறிது
வெந்தையம் 20 கிராம்
இவைகளை துணியில் வைத்து கட்டி 15 லிட்டர் தண்ணீரில் போட்டு பயன்படுத்தலாம் , மண் பாணை மிகவும் நல்லது . (செய்முறைக்கு நன்றி மா.செந்தமிழன்)

Wednesday, January 27, 2016

தமிழரின் "உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

தமிழரின் "உணவு பழக்கம்" பழமொழி வடிவில்
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.
* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா
* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.
* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல
* தன் காயம் காக்க வெங்காயம் போதும்
* வாழை வாழ வைக்கும்
* அவசர சோறு ஆபத்து
* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு
* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை
*இருமலை போக்கும் வெந்தயக் கீரை
* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.
* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி
* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்
* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை
* சித்தம் தெளிய வில்வம்
* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி
* சூட்டை தணிக்க கருணை கிழங்கு
* ஜீரண சக்திக்கு சுண்டக்காய்
* தலை வலி நீங்க முள்ளங்கி சாறு
* தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை
* பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
* மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
* வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
* வாத நோய் தடுக்க அரைக் கீரை
* வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்
* பருமன் குறைய முட்டைக்கோஸ்
* பித்தம் தணிக்க நெல்லிக்காய்
” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.
நலம் உடன் வாழ்வோம். தகவல்-ஆர்.எம்.எஸ்அக்ரே இன்புட்ஸ, விதை பூச்சிமருந்து, உரம் விற்பனையகம்,அண்ணா காய்கறி மார்க்கெட்- கிழக்கு புறம், மணப்பாறை.