Sunday, April 2, 2017

தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு

தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்

தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்கு சிவனார் வேம்பு குழித்தைலமும் சிவனார் வேம்பு சூரணமும் மிக மிக நல்ல பலனை கொடுக்கும்
சிவனார் வேம்பு மூலிகை சமூலமாக தேவையான அளவு எடுத்து நிழலில்
காயவைத்து அதே அளவு வாலுளுவை அரிசி எடுத்து பொடி செய்து கொல்லன்
கோவைக் கிழங்கு சாற்றால் அரைத்து காய வைத்து குழித்தைலமாக இறக்கி வைத்துக் கொள்ளவும்
இத்தைலத்தை பத்து சொட்டு அளவு பனை
வெல்லம் அல்லது வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு அதே தைலத்தை வெளி
பூச்சாக போட்டு வர குஷ்டம் முதல் அனைத்து தோல் சம்பந்தப்பட்ட வியாதி
களும் தீரும்
இம்மருந்தை சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சி செய்து வெற்றி கண்ட மருந்து
மேலும் படத்தில் உள்ள கொல்லன் கோவைக் கிழங்கை மாட்டுத் தொழுவத்தில் பாம்புகள் வராமல் இருப்பதற்கும்
வீடுகள் மற்றும் கடையின் முன்பகுதியில் கட்டி தொங்கவிட்டு கண்திருஷ்டி கழிந்து
வியாபாரம் பெருகவும் இன்றும் பயன் படுத்தி வருகின்றனர்
இன்னும் தோல் சம்மந்தபட்ட நோய்களுக்கு
அதிக மருத்துவங்ஙள் உள்ளன
அடுத்தடுத்து பார்ப்போம்
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை
மம்சாபுரம் கிராமம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம
கைபேசி 9345168097
கருடன் கிழங்கு என்னும்
கொல்லன் கோவைக் கிழங்கு மூலிகை

ஆடாதொடா

:

ஆடாதொடா இலையை நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

ஆடாதொடா இலையை அரைத்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்தால் இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.
 

ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு தீரும்
 

ஆடாதொடா இலையை பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
 

ஆடாதொடா இலையை உலரவைத்து , சுருட்டி புகைப் பிடித்தால் இரைப்பு நோய் குணமாகும்.
 

ஆடாதொடா பூவை வதக்கி கண்கள் மீது வைத்து கட்டிக்கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.
 

ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் அனைத்துவிதமான உடல் வலிகளும் குணமாகும்.

ஊமத்தை:


ஊமத்தை இலையைஅ விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி கட்டினால் நாய்க்கடியால் ஏற்பட்ட புண், குழிப் புண் கட்டிகள் போன்றவை விரைவில் ஆறும்.

ஊமத்தை இலையுடன் மருதாணி இலையை சேர்த்து அரைத்து சேற்று புண்களில் தடவினால் விரைவில் அவை ஆறிவிடும்.

ஊமத்தை இலையை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தால் கீல் வாயு எலும்பு வீக்கம் கட்டிகளால் உண்டாகும் வலி ஆகியவை தீரும்.

ஊமத்தை இலையை வதக்கி மார்பகங்களில் ஒத்தடம் கொடுத்தால் அதிகப்படியான பால் சுரப்பு குறையும்.

ஊமத்தை விதையை பசு நெய்யில் வறுத்து அரைத்து மூலத்தின் மூளையில் பூசிவந்தால் அது விரைவில் அதிர்ந்துவிடும் மூலமும் குணமாகும்.

கல்யாணமுருங்கை கீரையின் பயன்கள்

கல்யாணமுருங்கைக் கீரை சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும். கல்யாணமுருங்கைக் கீரையுடன் ஊறவைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

கல்யாணமுருங்கை கீரையுடன் மிளகு 3 சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.

கல்யாணமுருங்கை கீரயுடன் பார்லியை சேர்த்து அரைத்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

கல்யாணமுருங்கை கீரையுடன் ஓமம் வாஉவிளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

கல்யாணமுருங்கைக் கீரையை கறுப்பு எள் ஊறவைத்து தண்னீரில் அரைத்து , காலை , மாலை இருவேளையும் சாப்பிட்டால் தடைபட்ட/ தாமதித்த மாதவிலக்கு சீராகும்

கல்யாணமுருங்கை கீரை, கசகசா உளுந்து ஆகியவற்றை மாதுளம் பழச் சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்..

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க

பிரசவித்த தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க மருத்துவம்:
தயாரித்த மருந்து:

1. தண்ணீர் விட்டான் கிழங்கு நெய்-1 தேக்கரண்டி தினம் மூன்று வேளை கொடுக்கவும்.
 

2. அமுக்கரா இளகம்-5 கிராம் தினம் இரு வேளை ¼ டம்ளர் பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.

கைப்பக்குவ மருந்து:
1. பால் அதிகம் சேர்த்து கொள்ளல்.
2. பூண்டு அதிகம் உணவில் சேர்த்தல்.
3. கரும்பு சாறு 200 மிலி தினம் ஒரு வேளை கொடுத்தல்.
4. உணவில் பால் மற்றும் பால் பொருட்கள் அதிகம் சேர்த்து கொள்ளல்.
5. பருத்தி பால் பாயசம் சேர்த்து கொள்ளல்.
6. நேந்திரம் பழம் தாராளமாக சேர்த்து கொள்ளல்.

எள்ளு அதன் பயன்கள்:


எள்ளு செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு அலசினால் பசைபோன்ற திரவம் மிதக்கும். இதனால் கண்களைக் கழுவினால் கண்களில் உண்டாகும் புண்கள் குணமாகும்.

எள்ளு செடியின் இலைகளை கஷாயம் வைத்து குடித்தால் சீத கழிச்சல் குணமாகும்.

எள்ளு செடியின் இலைகளை வதக்கி கட்டிகள் மீது வைத்துக்கட்டினால் அவை விரைவில் பழுத்து உடையும்.

எள்ளுக்காயை சுட்டு சாம்பலாக்கி அதை புண்கள் மீது தூவிவந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்த மூல குணமாகும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

கரிசலாங்கண்ணிக் கீரை பயன்கள்:


கரிசலாங்கண்ணிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூச்சிரைப்பு குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டும் கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் & புகைச்சல் குணமாகும்..
 

கரிசலாங்கண்ணி கீரை சாறு 30 மில்லி , பருப்பு கீரை 30 மில்லி இரண்டையும் ஒன்றாக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை சாறில் நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை சாறு எடுத்து அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்கு தொடர்ந்து குடித்தால் பித்தப்பை கற்கள் கரையும்.

கரிசலாங்கண்ணி கீரையை மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் கல்லீரல்
வீக்கம் குணமாகும்.

கரிசலாகண்ணி கீரையுடன் இரண்டு கடுக்காயை தட்டிப்போட்டு கஷாயம்
வைத்து குடித்தால் மலசிக்கல் குணமாகும்.

https://www.facebook.com/profile.php?id=100008451373713

கீழாநெல்லியின் பயன்கள்:

கீழாநெல்லியின் பயன்கள்:

கீழாநெல்லி வேரை இடித்துப் பிழிந்து கறந்த பாலில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால் அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

கீழாநெல்லி இலையைச் சாறு பிழிந்து கற்கண்டு சேர்த்து குடித்தால் சிறுநீர் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.

கீழாநெல்லிக் கீரையைச் சமைத்து சாப்பிட்டால் கண்களில் மஞ்சள் நிறம் மாறும்.

கீழாநெல்லி இலையுடன் உளுந்து மஞ்சள் ஆகியனவர்றை சேர்த்து அரைத்து நகக் கண்களில் பூசினால் நகங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

கீழாநெல்லி இலை கோவை இலை, அசோக மரப்பட்டை நாவல் மரபட்டை அனைத்தையும் சம அளவு எடுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

கீழாநெல்லி, மருதாணி, மஞ்சள் ஆகியவற்ரை சேர்த்து அரைத்து கால்களில் பூசினால் பித்த வெடிப்பு சேற்று புண் போன்றவை குணமாகும்.

கீழாநெல்லி , கரிசாலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.

சிறு கீரையின் பயன்கள்:


  சிறு கீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடுசாதத்தில்போட்டுச்
சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
சிறு கீரயுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.


சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
சிறு கீரியுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம் , பூண்டு , மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் குடித்தால் கண் பாதிப்புகள் குணமாகும்.

சிறு கீரையுடன் சுக்கு , மிளகு , திப்பிலி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

சிறு கீரையுடன் முந்திரி பருப்பு மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் பருக்கள் விரைவில் மறையும்.

சிறு கீரை வேரை இடித்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்கு குடித்துவந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)