Thursday, October 29, 2015

வெற்றிலை நெல்லி ரசம் !



குதிகால், பாதம், கெண்டைக்கால், மூட்டு, தொடை ஆகிய இடங்களில் ஏற்படும் வலியைப் போக்கும் திறமை பெற்றது வெற்றிலை நெல்லி ரசம்.
தேவையான பொருட்கள்:
முழு நெல்லிக்காய் - 10,
வெற்றிலை - 20,
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 4,
பூண்டு - 6 பல்,
வால் மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
* காய்ந்த மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நெல்லிக்காயை விதை நீக்கி சாறு எடுக்கவும்.
* கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெற்றிலை மூன்றையும் நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
* வெறும் சட்டியில் காய்ந்த மிளகாய், பூண்டு, ஒன்றிரண்டாகத் தட்டிய வால்மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு இளம் சிவப்பாக வறுக்கவும்.
* பின்னர், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெற்றிலை, கொத்தமல்லி இலையை அதில் போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஆற வைத்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
* ஒரு சட்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைப் போட்டு வதக்கவும்.
* அதில் நெல்லிக்காய் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
* அடுப்பை மிதமாக எரியவிடவும். கொதிக்கும் பக்குவம் வந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடாமல் கீழே இறக்கவும்.
* இந்த நெல்லி ரசத்தை குடிப்பதன் மூலம் குதிகால் வலியை எளிதில் குறைப்பதோடு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இதயநோயாளிகளுக்கும் ஏற்ற உணவாக அமைகிறது.
http://www.maalaimalar.com/

Tuesday, October 20, 2015

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம் :-
1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

Monday, October 19, 2015

கருப்பு உளுந்து லட்டு

.
தேவையான பொருட்கள்:-
கருப்பு உளுந்து ------------------- 1 கப்
பொட்டுகடலை ------------------ 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை ------------- 3/4 கப்
ஏலக்காய் பொடி ----------------- 1/2 டீஸ்பூன்
நெய் தேவையான அளவு.


சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.


செய்முறை:-
முதலில் கருப்பு உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.

வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.
சலித்தெடுத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் சர்க்கரை கலந்து வைத்துள்ள லட்டு மாவில் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.
சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.

குறிப்பு:- சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக்கொண்டு வர வேண்டும்.

நெய் மற்றும் சர்க்கரையின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக்கொள்ளலாம்.

விருப்பப்பட்டால் பாதாம் பருப்பையும் நெயில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்

30 வகை கீரை பயன்களும்


30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.

குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.

அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.

புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.

பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.

பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.

பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.

சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.

வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.

முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.

வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.

முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.

புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.

புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.

நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.

தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.

கல்யாண முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.

முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.

பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.

புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.

மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.

மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல்
போக்கும்.

முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.

வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.

தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை
நீக்கும்.

தவசிக்கீரை- இருமலை போக்கும்.

சாணக்கீரை- காயம் ஆற்றும்.

வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.

விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.

கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.

துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.

துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.

நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்

உடல் நலத்தை பாதுகாக்கும் பசலைக்கீரையின் மருத்துவ குணங்கள்....
நமது சமையலுக்கு பசலைக்கீரையைப் பருப்புடன் சேர்த்து சமைப்பதால், அதற்குப் பருப்புக்கீரை என்றொரு பெயரும் உண்டு. இந்தக் கீரை நம் நாட்டில் பண்படுத்தப்பட்ட நிலங்களில் பரவலாகக் காணப்படும். கொடிப்பசலை, குத்துப்பசலை, வெள்ளைப்பசலை என, பசலைக்கீரையில் பல வகைகள் உள்ளன. நம் ஊரில் அதிகம் கிடைப்பது, குத்துப்பசலைதான்.

பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிக அளவிலும், மாவுச்சத்து குறைவாகவும் இருக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்களும், சர்க்கரை நோயாளிகளும் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், கடைசல் போல் செய்து சாப்பிடலாம்.உணவில் பசலைக்கீரையை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். பசலைக்கீரையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவது காமாலை மற்றும் கல்லீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு மிகுந்த பலன் கொடுக்கும். 

பசலைக்கீரையை மோருடன் சேர்த்துச் சாப்பிட்டால், உடல் வலிமை அடையும். எனவே, சிறுவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் தாராளமாகச் சாப்பிடலாம். உடல் சூடு அதிகம் இருப்பவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடலில் சூடு குறைந்து, குளுமை பெறும். குடல் நோய்கள் வராது. பசலைக்கீரையின் தண்டுச்சாற்றை குழந்தைகளுக்குக் கொடுத்துவந்தால் ஜீரண சக்தி மேம்படும். சளி, நீர்க்கோவை போன்றவையும் சரியாகும்.

பசலைக்கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்துவந்தால், ரத்தசோகை வராது. நரம்பு மண்டலங்கள் சீராக இயங்கும். சர்க்கரை நோயாளிகளும், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களும், சப்பாத்திக்குப் பசலைக்கீரைக் கூட்டு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. பசலை இலைச்சாறு எடுத்து, கால் முதல் அரை ஆழாக்கு வரை நாள்தோறும் காலையும் மாலையும் சாப்பிட்டுவந்தால் உடலில் ஏற்படும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, எரிச்சல், சீதபேதி, ரத்தபேதி முதலான நோய்கள் குணமாகும்.

உடலின் உள் வெப்பம் காரணமாக ஏற்படும் தலைவலி நீங்க, பசலை இலையை நன்றாக அரைத்து, நெற்றியின் மீது பற்றுப் போடலாம். தலைவலி நீங்கும். அக்கி நோயால் அவதிப்படுபவர்கள், பசலை இலையை நன்றாக நசுக்கி அக்கியின் மீது தொடர்ந்து தடவி வந்தால், அக்கி குணமாகும். பசலை இலையையும் அதன் விதையையும் சேர்த்து நன்றாக அரைத்து, தீப்புண், வெந்நீரால் ஏற்பட்ட காயம், சொறி, சிரங்கு ஆகியவற்றின் மீது தடவினால், நல்ல பலன் கிடைக்கும். பசலைக் கீரையின் தண்டை அரைத்து, வேர்க்குரு, கை, கால்களில் ஏற்படும் தோல் எரிச்சலுக்குப் பற்று போடலாம்.

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு

 இயற்கை மருத்துவம்

தேவையான பொருட்கள்
பூசணிக்காய் - அரை கிலோ
தேன் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 300 மி.லி.



செய்முறை :

• வெண்பூசணியின் மேல் தோலை நீக்கி விட்டு சிறுதுண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்து தண்ணீர் கலந்து வடிகட்டவும். • அதில் தேன் கலந்து பருக வேண்டும்.

இந்த பூசணி சாறு உடலில் உள்ள அமிலத்தன்மையை நீக்கும். உடல் சூட்டாலும், பித்தத்தாலும் உண்டாகும் வயிற்று புண், வாய்ப்புண், மூலம், சிறுநீர் சம்பந்தமான நோய்கள், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் போன்றவைகளுக்கு சிறந்த மருந்து. இந்த சாறு ரத்தத்தில் காரத்தன்மையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் காலை 200 மி.லி. வெண்பூசணி சாறு பருகலாம். புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் இந்த சாறு பருகினால் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். உடல் சூடு குறையும்.

உடலில் உள்ள திசுக்கள் புத்துணர்ச்சி பெறும். சர்க்கரை நோயாளிகள் இந்த சாற்றில் உப்பு மற்றும் சீரகத்தூள் கலந்து பருக வேண்டும்.

ஜீரண சக்திக்கு சிறுகீரை.

ஜீரண சக்திக்கு சிறுகீரை.

தமிழ்நாட்டில் அதிக அளவில் தோட்டங்களிலும் வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்படுவது சிறுகீரை. தண்டு வகையைச் சேர்ந்த சிறுகீரைக்கு, ‘சில்லி’, ‘சிறிய கீரைத்தண்டு’ என வேறு பெயர்களும் இருக்கின்றன. நீளமான தண்டுகளைக் கொண்ட இந்தக் கீரையின் தண்டு, இலை இரண்டுமே மருத்துவப் பலன்கள் நிறைந்தவை.

சிறுகீரையைச் சாப்பிட்டுவந்தால், கண் பார்வைத்திறன் மேம்படும். கண் புகைச்சல், கண் காசம், கண்ணில் ஏற்படும் படலம், புண்கள் மற்றும் உடலில் வரக்கூடிய பித்தநோய்கள் குணமாகும்.

மலச்சிக்கல் பிரச்னை ஏற்பட்டால், செரிமானக் கோளாறுகள் உண்டாகும். மேலும், மூலம் உள்ளிட்ட பலவேறு பிரச்னைகளும் வரும். சிறு கீரையைச் சீராக உணவில் சேர்த்து வந்தால், அது மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும். ஜீரண சக்தி மேம்படும்.

சிறுகீரையை உண்பதால், சிறுநீர் நன்றாகப் பிரியும். உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், நீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும். குரல் வளம் பெறும்.

சிறுகீரையை வேர் முதல் இலை வரை எடுத்து, மிளகுத் தூள், உப்பு, நெய் சேர்த்து அம்மியில் அரைத்துவைத்து, 5-10 கிராம் அளவுக்கு ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டால், நினைவுத்திறன் பெருகும்.

சிறுகீரையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இதனைச் சீரான இடைவெளியில் சாப்பிட்டுவந்தால், எலும்புகள் பலமடையும். உடல் தளர்ச்சி நீங்கும்.

சிறுகீரையுடன் மஞ்சளை சிறிதளவு சேர்த்து அரைத்து, சொறி, சிரங்கு உள்ள இடங்களில் தடவிவர, நிவாரணம் கிடைக்கும்.

சிறுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனானவர்களுக்கு மிகவும் ஏற்றது.

சிறுகீரையுடன் மிளகைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டுவர, சரும நோய்கள் உண்டாகாது.

சிறுகீரையுடன் மஞ்சள், முந்திரிப் பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, பருக்கள் மீது பூசினால், பருக்கள் மறையும்