Saturday, April 12, 2025

புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் முறை

 புண்ணாக்கு கரைசல் தயாரிக்கும் முறை

கொடிவகை பயிர்களுக்கு புண்ணாக்கு கரைசல் தயாரித்து பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்கும் முறை
தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் :
தேங்காய் புண்ணாக்கு 5 கிலோ
வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ
பருத்திக் கொட்ட புண்ணாக்கு 5 கிலோ
செய்முறை
மூன்று புண்ணாக்கையும் ஒரு டிம்பில் கொட்டி நன்கு முழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 4 நாட்களுக்கு ஊற விட வேண்டும். நான்கு நாட்கள் கழித்து அசோஸ்பைரில்லம் 2 கிலோ> சூடோமோனஸ் 2 கிலோவையும் அதில் கொட்டி தண்ணீர் ஊற்றி கறைத்து திரும்ப 4 நாட்களுக்கு ஊற விட வேண்டும். அதன் பிறகு அதில் 2 லிட்டர் கியூமிக் கரைசலை அதில் ஊற்றி நன்கு கலக்கிவிட்டு காலை அல்லது மாலை நேரத்தில் தண்ணீர் பாயும் சமையத்தில் செடிகளுக்கு ஊற்றி விடலாம்
பயன்கள்
செடி இது ஒரு வளர்ச்சி ஊக்கி மாதிரி செயல்படும் செடி விரைவாக வளரும்
வேர் வளர்ச்சி அதிகரிக்கும். பூ , பிஞ்சு அதிகம் பிடிக்கும். காய்கள் நல்ல தரமானதாக இருக்கும்.
உயிர்உரங்கள் தேவைக்கு தொடர்பு கொள்ள
9940198948

தென்னைக்கு இயற்கை முறையில் இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் :

 தென்னைக்கு இயற்கை முறையில் இடுபொருள் கொடுக்கும் அட்டவணை விபரம் :

1வது நாள் : ஒரு மரத்திற்கு 10 மில்லி சூடோமோனஸ் தரைவழி தண்ணீர் வழி தரவும்.ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் தரைவழி பாசத்துடன் தரவும்.
உயிர்உரக் கலவை தயாரித்து பயன்படுத்தும் முறை
100கிலோ நன்கு மக்கிய தொழுவுரத்தில்2 கிலோ அசோஸ்பைரில்லம், 2கிலோ பாஸ்போ பாக்டிரியா, 2கிலோபொட்டாஷ் பாக்டிரியா, 2கிலோ வேம் , ஒரு கிலோ விரிடி, 1கிலோ சூடோமோனஸ் இவற்றை எருவில் கொட்டி நன்றாக கலந்த பிறகு நாட்டுச்சர்க்கரை 2 கிலோவை தண்ணீர் nஊற்றி கரைத்து அந்த தண்ணீஐர எருவில் தெளித்துவிடவேண்டும் நாம் கையில் அள்ளி பார்த்தால் புட்டு பதத்தில் இருக்கனும். இவற்றை நிழலில் கோணி சாக்கு கொண்டு காற்றுபுகாமல் மூடி ஒருவாரம் வரை வைத்திருந்தால் பாக்டிரியாவின் எண்ணிக்கை அபரிவிதமாக பெருகும் பிறகு நமது வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு எடுத்து பயிருக்கு பயன்படுத்தலாம் உரச்செலவை குறைக்கும். அடியுரமாக பயிருக்கு பயன்படுத்தலாம்
7 வது நாள்: ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் எருக்கு கரைசல் தரைவழி தரவும்.
ஒரு மரத்திற்கு 30-50 மில்லி மீன் அமிலம் பாசனத்துடன் தரவும்.
14 வது நாள்: ஒரு மரத்திற்கு 3 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 30-50 மில்லி மீன் அமிலம் தரைவழி பாசத்துடன் தரவும்.
24 வது நாள்: ஒரு மரத்திற்கு 30 -50 மில்லி இ. எம் கரைசல் பாசனம் வழி தரவும்.
ஒரு மரத்திற்கு கடலை புண்ணாக்கு கரைசல் 3 லிட் அல்லது கோமியம் 200 ml அல்லது 50 கிராம் பாஸ்போ பாக்டீரியா வீதம் தரைவழி தரவும்.
பொதுவாக இது நாள் வரை சரியாக பராமரிக்கப்படாமலிருக்கும் அல்லது புதிதாக வைக்கப்பட்டத் தென்னைக்கு*
3 மாத பராமரிப்பு:
1. தரைவழி மரத்திற்கு 20 கிராம் சூடோமோனாஸ் அல்லது விரிடி தரைவழி தரவேண்டும்.
2. வட்டப்பாத்தியில் மரத்திற்கு அரைக் கிலோ வேப்பம் புண்ணாக்கு வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
3.வட்டப்பாத்தியில் மரத்திற்கு 5 கிலோ காய்ந்த தொழுவுரம் அல்லது 2 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் வைத்து மண்ணால் மூடி தண்ணீர் தர வேண்டும்.
4. புதுப்பாளை விடவோ அல்லது குரும்பை உதிராமலிருக்க அல்லது காய் பெருக்க போரான் சத்து கொடுக்கலாம். எருக்கு கரைசலை தரலாம்.
5. தோகையில் உள்ள கசடுகளை நீக்கலாம்,
6. 2 கிலோ வேப்பம்புண்ணாக்குடன் 2 கிலோ நிலத்தின் மண்ணை நன்கு கலந்து தென்னையின் தோகைகளுக்குள் போட்டு விட வேண்டும், இது அவசியம்.
மண் உப்பாகவோ (PH 7.5க்கு மேல்) தண்ணீர் சப்பையாக உப்பாக( TDS 500க்கு மேல்) இருந்தால் தரைவழி மரத்திற்கு இ.எம் கரைசலை 20 மி.லிட் வரை ஒவ்வொரு பாசனத்தின் போதும் தரலாம்.
பாசனம்
மரத்திற்கு பொதுவாக 80 லிட் தண்ணீர் தருவது நலம். குறைந்தபட்சம் 15-20 லிட்டர களாவது தரவேண்டும். அதனுடன் இயற்கை இடுபொருள் குறைந்தபட்சமாவது கலந்து தரவேண்டும்.
மூடாக்கு முக்கியம்.குறைந்த தண்ணீர்,இடுபொருள் இருந்தாலும் மூடாக்கு இருப்பது நல்ல பெரிய பலன் தரும்
உயிர்உரங்கள் தேவைக்கு தொடர்புகொள்ள
9952305745 --8870392422