
சாணிபாச கரைசல் – இயற்கை விவசாயிகளுக்கு ஒரு வரம்!

ஒரு முறை தயாரித்தால் போதும்…

பிரைமோர் போல தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய

பல பரிணாமங்களில் வேலை செய்யும்

உயிர்சத்து நிறைந்த உன்னத கரைசல்

படிநிலை – 1 : பாசம் உருவாக்குதல்
தேவையான பொருட்கள்:
• நாட்டு மாட்டு சாணி ( காலையில் போட்டது ) – 200 கிராம்
• வெல்லம் / கருப்பட்டி – 200 கிராம்
• பயிர் மாவு – 200 கிராம்
(கடலை, கொள்ளு, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, நிலக்கடலை – ஏதாவது ஒன்று)
செயல்முறை:
சாணி + வெல்லம் + பயிர் மாவு

தண்ணீர் சேர்க்காமல் பிசைந்து

பிள்ளையார் பிடிப்பது போல உருண்டைகளாக செய்து

2 நாட்கள் நிழலில் வைக்கவும்
பிறகு

28 லிட்டர் கொள்ளளவு உள்ள வாய் அகன்ற பாத்திரத்தில்

உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி

நல்ல வெயிலில் வைக்கவும்
13 நாட்களில் ஏடு போல பாசம் உருவாகும்

இது முதல் படிநிலை

படிநிலை – 2 : தாய் திரவம் தயாரித்தல்
தேவையான பொருட்கள்:
• ஏடு போல கிடைத்த பாசம்
• தண்ணீர் – 19 லிட்டர்
• வெல்லம் / நாட்டு சர்க்கரை – ½ கிலோ
• புளித்த மோர் (வெண்ணை எடுத்தது) – ½ லிட்டர்
செய்முறை:

20 லிட்டர் கொள்ளளவு பாத்திரத்தில் அனைத்தையும் கலந்து

2 நாட்கள் வெயிலில்

அதன் பின் 11 நாட்கள் நிழலில் வைக்கவும்

தாய் திரவம் தயாராகிவிடும்

படிநிலை – 3 : தொடர்ச்சியான பயன்பாடு (பிரைமோர் போல)

தாய் திரவம் ½ லிட்டர் முதல் 5 லிட்டர் வரை

200 லிட்டர் பிளாஸ்டிக் பாத்திரத்தில்

வெல்லம் – 2 கிலோ

மோர் – 2 லிட்டர்
5 நாட்களில் பாசனத்திற்கு தயாராகும்
13 நாட்களில் pH = 3

இதையே மீண்டும் தாய் திரவமாக பயன்படுத்தலாம்

பயன்பாடுகள்

ஜீவாமிர்தத்தில் கோமியத்திற்கு மாற்றாக

தொழு உரம் மக்க வைக்க

செடிகளுக்கு தெளிப்பு

10 லிட்டர் தண்ணீருக்கு 200 ml

ஏக்கருக்கு

5 லிட்டர் சாணிபாச + 200 லிட்டர் தண்ணீர்

வெல்லம் – 1 கிலோ | மோர் – 1 லிட்டர்

பூச்சி விரட்டி கசாயம்
• ஆடு தீண்டா செடி
• கசப்பு சுவை உள்ள செடி
• ஒடித்தால் பால் வரும் செடி

ஐந்து வகை இலைகள் (முதல் பத்திலை)

சாணிபாச கரைசலில் 2–3 நாட்கள் ஊறவைத்து

10 லிட்டர் தண்ணீருக்கு 300 ml பயன்படுத்தலாம்

அக்னி அஸ்திரம்
(கொதிக்க வைக்காமல்)

இதே முறையில் 10 லிட்டருக்கு 300 ml

தென்னையில் குரும்பை உதிர்வு தவிர்க்க
• எருக்கு செடி – 10 கிலோ
• சாணிபாச கரைசல் – 5 லிட்டர்
• தண்ணீர் – 200 லிட்டர்
5 நாட்கள் ஊறவைத்து

ஒரு மரத்திற்கு 10 லிட்டர்

கூடுதல் பயன்கள்

மக்கிய தொழு உரத்துடன் சேர்த்து வேர் வழி ஊட்டம்

செடிகள் பச்சை கட்டும் (ஹியூமிக் போல் விளைவு)

வயது முதிர்ந்த கத்தரியில் காய் மென்மை அதிகரிப்பு

மீன் அமிலம் தயாரிப்பிலும் பயன்படுத்திய அனுபவங்கள்

முக்கிய குறிப்பு

சாணிபாச கரைசலை தண்ணீர் கலக்காமல் நேரடியாக தெளிக்கக் கூடாது

இலைகள் உதிர வாய்ப்பு உள்ளது
No comments:
Post a Comment