Saturday, May 25, 2024

Recover Land in 60 days

May be an image of 2 people and text that says 'கெட்டு போன நிலத்தை 60 நாட்களில் மண் புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்ப பெறுவது எப்படி???... 20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது, அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும்... அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டு போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டு விடும்.. 光头 இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்..'

 20 வகையான விதைகள் ...

🍁 4 தானியங்கள்:
சோளம்
கம்பு
திணை
சாமை, கேழ்வரகு
🍁 4 பருப்பு:
பாசி பயிர்
உளுந்து
தட்ட பயிர்
கொள்ளு
துவரை, அவரை, மொச்சை
🍁 4 எண்ணெய் வித்து:
ஆமணக்கு
நில கடலை
எள்ளு
சூரிய காந்தி
🍁 4 வாசனை பொருட்கள்:
கடுகு
வெந்தயம்
மல்லி
சோம்பு
🍁 4 உர செடி:
பச்ச பூண்டு
அகத்தி
செனப்பு
நரி பயிர்
பனி பயிர்
இந்த 20 வகையான விதைகளை ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவைகளில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும். நடுத்தர விதைகளை தனியாகவும், பெரிய விதைகளை தனியாகவும் பிரித்து கொண்டு 3 சுற்றுகளாக விதைத்தால் ஓவ்வொன்றும் முளைத்து வளரும். பாதி செடிகள் 60 நாட்களில் பூ வைக்கும். அந்த தருணத்தில் இச்செடிளை மடித்து திரும்ப அப்படியே மண்ணுக்கு உரம் ஆக்க உழுதல் வேண்டும். அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி அந்நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றுகிறது.
🍁 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்..

No comments:

Post a Comment