தேவையானவை:
நிலக்கடலை – 100 கிராம்,
வெல்லம் – 50 கிராம்,
தேங்காய்பால் – ஒரு கப்,
ஏலக்காய், சுக்கு – சிறிதளவு,
வாழைப்பழம் – 1.
செய்முறை:
நிலக்கடலையை முந்தைய நாள் இரவே தண்ணீரில் ஊறவைக்கவும்.
ஊறிய கடலையின் தோல்
நீக்கி, தேங்காய் பால், வெல்லம், வாழைப்பழம், ஏலக்காய், சுக்கு சேர்த்து
மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி அருந்தலாம்.

பலன்கள்: நிலக்கடலையில்
உள்ள புரதமும் வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்தும் உடலுக்கு வலுவை
கூட்டும். வாழைப்பழம் சேர்ப்பதால், வயிற்றுப் பிரச்னையைச் சரிசெய்யும்.
சர்க்கரை நோயாளிகள் இந்தப் பானத்தைத் தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment