Sunday, April 2, 2017

சிறு கீரையின் பயன்கள்:


  சிறு கீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடுசாதத்தில்போட்டுச்
சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
சிறு கீரயுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்.


சிறு கீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
சிறு கீரியுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக்கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

சிறு கீரையுடன் மிளகு, வெங்காயம் , பூண்டு , மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் குடித்தால் கண் பாதிப்புகள் குணமாகும்.

சிறு கீரையுடன் சுக்கு , மிளகு , திப்பிலி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் வனப்பு பெறும்.

சிறு கீரையுடன் முந்திரி பருப்பு மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவிவந்தால் பருக்கள் விரைவில் மறையும்.

சிறு கீரை வேரை இடித்து சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்கு குடித்துவந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.
Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

No comments:

Post a Comment