Sunday, April 2, 2017

எள்ளு அதன் பயன்கள்:


எள்ளு செடியின் இலைகளை தண்ணீரில் போட்டு அலசினால் பசைபோன்ற திரவம் மிதக்கும். இதனால் கண்களைக் கழுவினால் கண்களில் உண்டாகும் புண்கள் குணமாகும்.

எள்ளு செடியின் இலைகளை கஷாயம் வைத்து குடித்தால் சீத கழிச்சல் குணமாகும்.

எள்ளு செடியின் இலைகளை வதக்கி கட்டிகள் மீது வைத்துக்கட்டினால் அவை விரைவில் பழுத்து உடையும்.

எள்ளுக்காயை சுட்டு சாம்பலாக்கி அதை புண்கள் மீது தூவிவந்தால் அவை விரைவில் ஆறிவிடும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை குடித்துவந்தால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை அரைத்து சுண்டைக்காய் அளவு தினமும் சாப்பிட்டுவந்தால் ரத்த மூல குணமாகும்.

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

No comments:

Post a Comment