Sunday, April 2, 2017

கல்யாணமுருங்கை கீரையின் பயன்கள்

கல்யாணமுருங்கைக் கீரை சீரகம் இரண்டையும் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து தினமும் அதிகாலையில் சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குணமாகும். கல்யாணமுருங்கைக் கீரையுடன் ஊறவைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

கல்யாணமுருங்கை கீரையுடன் மிளகு 3 சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் சளி மற்றும் கப நோய்கள் குணமாகும்.

கல்யாணமுருங்கை கீரயுடன் பார்லியை சேர்த்து அரைத்து கஷாயம் வைத்து குடித்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.

கல்யாணமுருங்கை கீரையுடன் ஓமம் வாஉவிளங்கம் இரண்டையும் சேர்த்து அரைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

கல்யாணமுருங்கைக் கீரையை கறுப்பு எள் ஊறவைத்து தண்னீரில் அரைத்து , காலை , மாலை இருவேளையும் சாப்பிட்டால் தடைபட்ட/ தாமதித்த மாதவிலக்கு சீராகும்

கல்யாணமுருங்கை கீரை, கசகசா உளுந்து ஆகியவற்றை மாதுளம் பழச் சாறு சேர்த்து அரைத்து தினமும் சாப்பிட்டால் ஆண்மை பெருகும்..

Contact:
Dr. Arun Chinniah MD (Naturopathy) Ph.D (Herbal)

No comments:

Post a Comment