Sunday, April 2, 2017

கரிசலாங்கண்ணிக் கீரை பயன்கள்:


கரிசலாங்கண்ணிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மூச்சிரைப்பு குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரைச் சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் இரண்டும் கிராம் அளவுக்கு தேனில் குழைத்து சாப்பிட்டால் இருமல் & புகைச்சல் குணமாகும்..
 

கரிசலாங்கண்ணி கீரை சாறு 30 மில்லி , பருப்பு கீரை 30 மில்லி இரண்டையும் ஒன்றாக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை சாறில் நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கீரை சாறு எடுத்து அதிகாலையில் 30 மில்லி அளவுக்கு 48 நாள்களுக்கு தொடர்ந்து குடித்தால் பித்தப்பை கற்கள் கரையும்.

கரிசலாங்கண்ணி கீரையை மிளகு சேர்த்து அவித்து சாப்பிட்டால் கல்லீரல்
வீக்கம் குணமாகும்.

கரிசலாகண்ணி கீரையுடன் இரண்டு கடுக்காயை தட்டிப்போட்டு கஷாயம்
வைத்து குடித்தால் மலசிக்கல் குணமாகும்.

https://www.facebook.com/profile.php?id=100008451373713

No comments:

Post a Comment