Sunday, April 2, 2017

தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு

தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு
அனைத்து சகோதரர்களுக்கும் ஆத்ம நமஸ்காரம்

தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்கு சிவனார் வேம்பு குழித்தைலமும் சிவனார் வேம்பு சூரணமும் மிக மிக நல்ல பலனை கொடுக்கும்
சிவனார் வேம்பு மூலிகை சமூலமாக தேவையான அளவு எடுத்து நிழலில்
காயவைத்து அதே அளவு வாலுளுவை அரிசி எடுத்து பொடி செய்து கொல்லன்
கோவைக் கிழங்கு சாற்றால் அரைத்து காய வைத்து குழித்தைலமாக இறக்கி வைத்துக் கொள்ளவும்
இத்தைலத்தை பத்து சொட்டு அளவு பனை
வெல்லம் அல்லது வாழைப்பழத்தில் வைத்து சாப்பிட்டு அதே தைலத்தை வெளி
பூச்சாக போட்டு வர குஷ்டம் முதல் அனைத்து தோல் சம்பந்தப்பட்ட வியாதி
களும் தீரும்
இம்மருந்தை சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சி செய்து வெற்றி கண்ட மருந்து
மேலும் படத்தில் உள்ள கொல்லன் கோவைக் கிழங்கை மாட்டுத் தொழுவத்தில் பாம்புகள் வராமல் இருப்பதற்கும்
வீடுகள் மற்றும் கடையின் முன்பகுதியில் கட்டி தொங்கவிட்டு கண்திருஷ்டி கழிந்து
வியாபாரம் பெருகவும் இன்றும் பயன் படுத்தி வருகின்றனர்
இன்னும் தோல் சம்மந்தபட்ட நோய்களுக்கு
அதிக மருத்துவங்ஙள் உள்ளன
அடுத்தடுத்து பார்ப்போம்
பிரம்மஸ்ரீ கோவிந்தன்
சுவாமி சிவானந்தா சித்த வைத்திய சாலை
மம்சாபுரம் கிராமம்
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா
விருதுநகர் மாவட்டம
கைபேசி 9345168097
கருடன் கிழங்கு என்னும்
கொல்லன் கோவைக் கிழங்கு மூலிகை

No comments:

Post a Comment