Thursday, May 15, 2014

வாழைத்தண்டுப் பச்சடி


தேவையானவை: தயிர் – ஒரு கோப்பை, பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு – அரைக் கோப்பை, நறுக்கிய கொத்தமல்லித் தழை – சிறிது, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தயிரை நன்கு கலக்கி, மற்ற பொருட்களையும் சேர்த்து, பிரியாணியுடன் பரிமாறவும்.
பலன்கள்: வாழைத்தண்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குடலில் உள்ள கழிவைச் சுத்தப்படுத்தி வெளியேற்றும். உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாவைப் பாதுகாக்கும். சிறுநீரகக் கல், பித்தப்பையில் உள்ள கல்லைக் கரைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு உண்டு. மலச்சிக்கல், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.

No comments:

Post a Comment