Thursday, May 15, 2014

சாமை மிளகுப் பொங்கல்

தேவையானவை: சாமை அரிசி – 500 கிராம், பாசிப்பருப்பு – 250 கிராம், இஞ்சி (துருவியது) – இரண்டு தேக்கரண்டி, நெய் – 3 மேசைக்கரண்டி, முந்திரி – 10 கிராம், சீரகம் – 2 தேக்கரண்டி, மிளகு – 3 தேக்கரண்டி, கல் உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் நன்றாக ஊறவைக்கவும். இதனுடன் கல் அரித்த சாமை அரிசி, உப்பு கலந்து குக்கரில் மூன்று விசில் வைத்து வேகவிடவும். நெய்யைச் சூடாக்கி சீரகம், மிளகு, முந்திரி, இஞ்சி தாளித்து வேகவைத்த சாமையுடன் நன்கு கலக்கவும். சுவையான சாமைப் பொங்கல் தயார்.
பலன்கள்: எல்லாத் தாது உப்புகளும் நிறைந்தது சாமை. மாவுச் சத்தும் இதில் அதிகம். அதனுடன் நெய் சேரும்போது உடலுக்கு நல்லது. நெய் ரத்தத்தில் கொழுப்பாகப் படிந்துவிடாமல் ஆற்றலாக மாறுவதற்கு சோளம் உதவுகிறது. மிளகு, செரிமானத்தைச் சரிசெய்யும். குடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.

No comments:

Post a Comment