தேவையானவை: வறுத்துத் தோல் நீக்கிய நிலக்கடலை – 250 கிராம், பூண்டு – 10 பல், புளி – சிறிது அளவு, மிளகாய், சின்ன வெங்காயம் – தலா இரண்டு, உப்பு – சிறிதளவு. தாளிக்க: எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி, கடுகு, உளுந்து – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை: கடலையை நீர் சேர்த்து அரைத்து, பிற பொருட்களுடன் சட்னி பதத்தில் அரைத்து, தாளித்துப் பரிமாறவும்.
பலன்கள்: இதில் நல்ல கொழுப்பு, புரதமும் அதிகம் நிறைந்துள்ளது. நிலக்கடலையை, உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது. பசி எடுப்பதைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
No comments:
Post a Comment